Samsung கையடக்க தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ள இலக்கங்களுக்கு தானாக படங்கள் அனுப்பப்படுவதாக அதன் பயன்பாட்டாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
Galaxy Note 8, Galaxy S9 உட்பட புதிய கையடக்க தொலைபேசிகளிலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
sms மூலம் கையடக்க தொலைபேசியில் உள்ள புகைப்படங்கள் ஏனையவர்களுக்கு அனுப்பப்படுவதாக பயன்பாட்டாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாடு கிடைத்த பின்னர் இந்த பிரச்சினை குறித்து ஆராய்வதாக Samsung நிறுவனம் தெரிவித்துள்ளது.
கையடக்க தொலைபேசியிலேயோ அல்லது மென்பொருளிலோ கோளாறுகள் இருப்பதாக தங்களுக்கு தெரியவில்லை என Samsung நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினைக்கு காரணம் கண்டுபிடிக்கப்படும் வரை பயனாளர்கள் கையடக்க தொலைபேசியின் சேமிப்பகத்திற்கும் sms அனுப்பும் செயலிக்கும் தொடர்பில்லாமல் செய்வதற்கு தாம் நடவடிக்கை மேற்கொள்வதாக Samsung நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.