பில்லி சூனியம் வைப்பதாக பாலியல் தொழிலுக்கு பெண்களை கடத்திய நர்சுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை வித்திக்கப்பட்டு உள்ளது.
லைபீரியாவில் பிறந்து இங்கிலாந்தில் நர்ஸ் வேலை பார்த்து அங்கு குடியுரிமை பெற்ற ஜோசப்பின் இயாமு ( 51), நைஜீரியாவில் கிராமப்பகுதிகளில் உள்ள பெண்கள் முன்னேற்றத்திற்காக ஒரு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.
பின்னர் ஐரோப்பாவில் சொகுசான வாழ்க்கை அமைத்து தருவதாக வாக்களித்து பெண்களை அவர் ஜெர்மனிக்கு கடத்துவார்.
பெண்களைக் கடத்தும் முன், கோழிகளின் இதயத்தை உண்ணுதல், இரத்தத்தைக் குடித்தல், உடலைக் கீறிக்கொள்ளுதல் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட மதச் சடங்கு ஒன்றை நடத்தும் ஜோசப்பின் அந்த பெண்களிடம் தனக்கு 38,000 டாலர்கள் கொடுக்க வேண்டும் என்றும், எங்கும் ஓடிப்போக மாட்டோம் என்றும், போலீசுக்கு தகவல் கொடுக்க மாட்டோம் என்றும் சத்தியம் வாங்கிக் கொள்வார்.
இம்முறை ஜோசப்பின் ஐந்து நைஜீரியப் பெண்களை ஆசை காட்டி படகு ஒன்றில் ஏற்றி ஜெர்மனிக்கு அனுப்பினார். அங்கு சென்றதும் அந்தப் பெண்கள் பாலியல் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்தப்பட்டார்கள்.
இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள பாலியல் விடுதி ஒன்றின் உரிமையாளர் அந்த ஐந்து பெண்களில் ஒரு பெண்ணின் பாஸ்போர்ட் போலி என சந்தேகம் ஏற்பட்டதன் பேரில் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
புகாரின் பேரில் விசாரிக்கத் தொடங்கிய ஜெர்மன் போலீசார், இங்கிலாந்து மற்றும் நைஜீரிய போலீசாருடன் இணைந்து மேற்கொண்ட வேட்டையின் முடிவாக இங்கிலாந்து போலீசார் ஜோசப்பினை கைது செய்தனர் .
இந்த வழக்கை 10 பெண் நீதிபதிகள் உள்ளிட்ட 11 நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்தது. இதில் ஜோசப்பினுக்கு14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.