ஷாரிக்கை உன் படுக்கையில் படுக்க அனுமதிக்காதே என்று மும்தாஜ் ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மகத்தும், ஷாரிக்கும் எப்பொழுது பார்த்தாலும் ஐஸ்வர்யா, யாஷிகாவுடன் சேர்ந்து அவர்களின் படுக்கையில் படுக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மகத் யாஷிகா, ஐஸ்வர்யாவுக்கு இடையே படுத்துக் கொள்கிறார். இந்நிலையில் சிங்கிள் பெட் வேண்டும் என்று ஐஸ்வர்யா மும்தாஜிடம் கூறுகிறார்.
சிங்கிள் பெட் இருந்தாலும் அவர்கள் வந்து படுப்பார்கள். சிங்கிள் பெட் வேண்டாம் ஐஸு என்று அறிவுரை கூறுகிறார் மும்தாஜ். ஷாரிக் உங்கள் பக்கத்தில் வந்து படுக்கக் கூடாது என்றால் நீங்கள் வாயை திறந்து சொல்ல வேண்டும் ஐஸு என்கிறார் மும்தாஜ்.
எவ்வளவு நட்பு இருந்தாலும், அன்பு பாசம் இருந்தாலும் சில விஷயங்கள் தப்பு என்று ஐஸ்வர்யாவிடம் கூறுகிறார் மும்தாஜ். ஒரு ஆம்பள வந்து பொண்ணு பெட்டில் படுப்பதை பார்த்து எனக்கு அசவுகரியமாக இருக்கு ஐஸு என்று மும்தாஜ் தெரிவித்துள்ளார்.
ஷாரிக் இந்த நான்ஸ்சென்ஸ் பண்ணாத உன் அறைக்கு போ என்று நான் கத்த ரொம்ப நேரம் ஆகாது. ஆனால் நான் சத்தம் போட்டிருந்தால் எல்லோரும் பார்த்திருப்பார்கள் என்று மும்தாஜ் கூறியுள்ளார்.
ஷாரிக் என்னுடன் வந்து பெட்டில் படுத்தாலும் எதுவும் செய்வது இல்லை நல்ல பையன் என்கிறார் ஐஸ். அதற்கு மும்தாஜோ அவன் நல்ல பையன் தான். ஆனால் ஃபீலிங்ஸ் இருந்தால் சில நேரம் கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்கிறார்.