ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எரிபொருள் விலையை பழைய விலையில் விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக நேற்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் அனைத்து பெற்றோலிய நிறுவங்களும் தற்போது பழைய விலையில் விற்பனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவ்வாறு இருக்கையில் ஜனாதிபதி குறித்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இருப்பினும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அதிகரித்த விலையில் பிரகாரம், 137 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 145 ரூபாவாகியுள்ளது.
148 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் 7 ரூபா அதிகரிப்புடன் 155 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒடோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒடோ டீசல் லீற்றர் ஒன்று 118 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 129 ரூபாவாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதேநேரம், லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளின் அதிகரிப்புக்கு அமைய,
Lanka Auto Diesel லீற்றர் ஒன்றின் புதிய விலை 118 ரூபாவாகவும், Xtra MILE லீற்றர் ஒன்றின் புதிய விலை 122 ரூபாவாகவும்,
Lanka Super Diesel (Euro 4) லீற்றர் ஒன்றின் புதிய விலை 129 ரூபாவாகவும், Lanka Petrol 92 Octane லீற்றர் ஒன்றின் புதிய விலை 146 ரூபாவாகவும்,
Xtra Premium (EURO3) லீற்றர் ஒன்றின் புதிய விலை 149 ரூபாவாகவும், Xtra Premium 95 (EURO 4) லீற்றர் ஒன்றின் புதிய விலை 158 ரூபாவாகவும் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.