மட்டக்களப்பில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு நபர் நேற்று முன் தினம் இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு கிரான் பகுதியில், வானும் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதால் இடம்பெற்ற குறித்த விபத்தில் பிரான்சில் இருந்து நாடு திரும்பிய 10 வயது சிறுவனும் வானின் சாரதியும் உயிரிழந்திருந்த நிலையில் மேலும் இருவர் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் கல்லாறு பகுதியைச் சேர்ந்த வேல்மாறன் என்ற நபர் நேற்றைய தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
பிரான்சில் இருந்து வருகைத்தந்த தமது உறவினர்களை அழைத்துக்கொண்டுவந்த வேளையிலேயே விபத்தில் சிக்குண்டு இவரும் உயிரிழந்துள்ளார்.
மேலும், இவர் அரபு நாடு ஒன்றில் பணி புரிந்து வந்ததாகவும், அண்மையில் தனது மனைவியின் பிரசவத்தினை முன்னிட்டு நாட்டுக்குத் திரும்பியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணி எனவும், மனைவியின் தங்கையின் கணவர் யுத்தத்தின்போது உயிரிழந்த நிலையில், மனைவியின் தாய்வீட்டு குடும்பத்தாரையும் இவர் கரிசனையுடன் கவனித்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.<