வெங்காய மீன் குழம்பு எப்படி தயாரிப்பது..?
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
கத்தரிக்காய் – 1
மீன் துண்டுகள் – 500 கிராம்
புளி கரைசல் – 2 முதல் 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
மசாலாவிற்கு…
எண்ணெய் – 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 25 முதல் 30
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சிறிது
செய்முறை
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின் சின்ன வெங்காயம், வெட்டி வைத்த பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி தக்காளி சேர்த்து நன்கு சமைக்கவும்.
பின் அவற்றை ஒரு ஜாரில் எடுத்து நன்றாக மசித்து வைக்கவும். இப்போது அதே கடாயில், எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து அத்துடன் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் சமைக்கவும்.
பின் மசாலா கலவை, மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக கலந்து, வெட்டி வைத்த கத்தரிக்காய் சேர்த்து அதனுடன் புளி கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கத்தரிக்காய் வேகும் வரை சமைக்கவும்.
பின்னர் மீன் துண்டுகளை சேர்த்து வேக விடவும். சுவையான வெங்காய மீன் குழம்பு தயார்.