Loading...
கொழும்பு, புறக்கோட்டை பிரதான வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு கடையில் ஏற்பட்ட தீ அருகில் இருந்த மேலும் சில கடைகளுக்கு பரவியுள்ளது.
அதன் பின்னர் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினர், கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
Loading...
எவ்வாறாயினும் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், தீயினால் உயிராபத்துக்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
Loading...