மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் வந்தாறுமூலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து ஏறாவூர் நோக்கி வந்த வேன் ஒன்று இன்று அதிகாலை 3.30 மணியளவில் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைகழகத்திற்கு அருகில் உள்ள மின் கம்பத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் ஏறாவூர் விதானையார் வீதியில் வசிக்கு 9 வயதான றமீஸ் சாபித் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த 6 பேரும் சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வேன் மோதியதில் மின் கம்பம் சரிந்து வீழ்ந்ததினால் மட்டக்களப்பின் சில பகுதிகளில் அதிகாலை மின் தடையும் ஏற்பட்டிருந்தது.

