உள்ளூர் செய்தி:முல்லைத்தீவு 03 ஆம் கட்டை, மஞ்சல் பாலத்தடியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கொக்கிளாய் பகுதியை சேர்ந்த 19 வயது ர.விஜிதரன் என்ற இளைஞரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த ஏனைய இரு இளைஞர்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த உறவினரொருவரது உடல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
அத்துடன் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக செலுத்தியமையே விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவம் குறித்து முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.