இந்தியாவைச் சேர்ந்த ஆதித்யா பல்லிவால் என்ற மாணவனுக்கு கூகுளில் ஆண்டிற்கு 1.2 கோடி ரூபாய் சம்பளத்திற்கு வேலை கிடைத்துள்ளது.
கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்களில் இயங்கி வருகிறது. இதை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் புதிய ஆராய்ச்ச்களை மேற்கொள்ள கூகுள் திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக உலகில் உள்ள பல நாடுகளில் தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறையில் பணியாற்றி உலகளவில் 50 பேர் தேர்வாகினர்.
இதில் இந்தியாவில் நடந்த நேர்முகத் தேர்வில் பெங்களூரின் இந்திய தொழில்நுட்ப கல்லூரி மாணவர் ஆதித்யா பல்லிவால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மாதத்திற்கு 10 லட்சம் சம்பளம் என ஆண்டிற்கு 1.2 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளார்.
வரும் ஜுலை 16-ஆம் திகதி பணியில் சேரவுள்ள ஆதித்யா பல்லிவால் கூறுகையில், கூகுளில் வேலை கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த நேரத்தில் கல்லூரி ஆசியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பலர் தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னோடி நிறுவனங்களில் உயரிய பொறுப்பில் இருந்து வருகின்றனர். அதில் கூகுளின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.