நமது தோலை மேலும் மென்மையாக்க முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இருக்கும் முடியை பல வகையில் பலபலப்பாக்க முடியும் என தெரியுமா?
ஆயிரம் கணக்கில் பணத்தை செலவு செய்யாமல் இவற்றினை பெற்று கொள்ள முடியும். இலகுவான சில விடயங்களை முயற்சித்து பாருங்கள் பின்னர் தெரியும் அதன் பலன்கள்.
மந்தமான, எண்ணெய் மற்றும் கலவை தோல் கொண்டவர்களுக்கு…
குளிர்ந்த யோகட் பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும். அதில் சக்கரை கொஞ்சமும் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் பாதி அளவு ஆராஞ்சு பழத்தை தேய்க்க வேண்டும். பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உடனே மாற்றத்தை பார்க்கலாம்.
மந்தமான, சோர்வடைந்த மற்றும் வறண்ட தோல் கொண்டவர்களுக்கு…
பப்பாசி பழத்தை கொண்டு தோலை மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் குளிர்ந்த பாலுடன் ஓட்ஸ் மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து பூச வேண்டும். சற்று நேரத்தின் முன்னர் குளிர்ந்த பால் மற்றும் நீரில் கழு வேண்டும். கழுவிய முகத்தை காய வைக்க வேண்டும்.
பழுப்பு நிரத்து தலை முடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…
இந்த எளிய, விரைவான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய ஸ்பிரே முயற்சியை முயற்சிக்கவும். இரண்டு துண்டு எலுமிச்சை பழதை இரண்டு கப் நீரில் போடவும். அதில் கிடைக்கும் நீரினை ஸ்பிரே பயன்படுத்தும் போத்தலில் ஊற்றி தலையில் தெளிக்கவும் உடனடியான பலனை பெற முடியும்.