புதிய ஆய்வில், தினமும் முட்டைகள் சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆபத்துக்கள் குறைவதைந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகளின் புதிய ஆய்வில் முட்டைகள் “நல்ல” கொழுப்பை உயர்த்துகின்றன, இது உண்மையில் இதயத்தை பாதுகாக்கிறது என தெரியவந்துள்ளது.
உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்த முட்டையுடனான உணவு உறவை எப்போதும், நெருக்கமாக வைத்து கொள்ள வேண்டும்.
இயத ஆபத்து ஒன்று ஏற்பட்டால் அடுத்த நிமிடமே முட்டை ஒன்றை உட்கொள்ள வேண்டும். அதேவே இதயத்தை பாதுகாக்கும்.
ஒரு நாள் ஒரு முட்டையை உணவில் சேர்த்து கொள்வது உண்மையில் இதய நோய் மற்றும் பக்கவாத ஆபத்தை குறைக்கின்றது.
சீனாவில் நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களிடம் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழப்பு வீதம் குறைவடையவும் முட்டை காரணமாக உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அன்றாடம் முட்டை உண்பவர்களை, முட்டைகளை உண்ணாதவர்களுடன் ஒப்பிடுகையில் 11 சதவிகிதம் குறைவான இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகுவது தெரியவந்துள்ளது.
முட்டை உண்பவர்களுக்கு இரத்தச் சர்க்கரை நோய்க்கான ஆபத்துக்களும் 26 சதவீதம் குறைவாக காணப்பட்டுள்ளது.
எனவே தினசரி உணவில் ஒரு முட்டையை சேர்த்து கொள்ளுமாறு கூறுகின்றது ஆய்வு.