Loading...
சமூக சீர்கேடு:காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 17வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அதேயிடத்தைச் சேர்ந்த 59வயதுடைய முதியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது,
Loading...
சிறுமி தனது சித்தியாருடன் வசித்து வருகின்றார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அயலில் உள்ள 59வயது முதியவர் நேற்று முன்தினம் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
சிறுமியின் தம்பி இந்த விடயத்தை அறிந்து சித்தியாருக்கு தெரிவித்துள்ளார். அவர் முறைப்பாடு செய்ததற்கு அமைவாகவே, சந்தேக நபரைக் கைது செய்துள்ளோம் என்றனர் பொலிஸார்.
Loading...