அம்பாறை – தமன – எக்கல் ஒயாவில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காணாமல் போன நான்கு பேரில் மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காணாமல் போனவரை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை, கந்தன சிறி சீவலி வித்தியாலயத்திலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற மாணவர்களுள், பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட 09 பேர், அம்பாறை, தமன எக்கல் ஓயவில் படகில் சென்றுள்ளனர்.
இதன்போது படகு கவிழந்து வித்துக்குள்ளானதில் அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து அருகிலிருந்த மீனவர்கள் ஐந்து பேரை காப்பாற்றிய போதிலும், பாடசாலையின் அதிபர், ஆசிரியர், காவலர் மற்றும் மாணவர் ஒருவர் உள்ளிட்ட நால்வர் காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில், பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.