Loading...
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன்-மஸ்கெலியா பிரதானவீதியில் பயணித்த பேருந்தினுள் மூங்கில் மரமொன்று ஊடறுத்து உட்புகுந்துள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த பேருந்து சேதமாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
நோட்டனிலிருந்து மஸ்கெலியா நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Loading...
இன்று காலை ஆறு மணியளவில் சீடன் பகுதியில் குறித்த பேருந்து பயணித்துக்கொண்டிருந்த போது வீதியோரத்திலிருந்த மூங்கில் தோப்பிலிருந்து மூங்கிலொன்று உடைந்து வண்டியின் முன் பகுதியில் குத்தி உள்ளே ஊடுருவியது.
இதனால் பேருந்தினுள் மக்கள் இல்லாதமையினால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர்
Loading...