அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கொ நகரில் செயல்பட்டு வரும் தியேல் அறக்கட்டளையின், 2018 ம் ஆண்டிற்கான தியேல் பெல்லோஷிப் விருது 21 வயதாகவும் தமிழக மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது.
உலகம் முழுவதிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேர் பட்டியலில் அபர்ணாவும் இடம்பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய பள்ளி பருவத்தை சென்னை மற்றும் மும்பையில் முடித்த அபர்ணா, சிறுவயதிலிருந்தே கணித பாடத்தில் ஆர்வமுடையவர்.
மேலும் விளையாட்டு துறையிலும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார். ரகசிய குறியீடு மற்றும் பொருளாதார ஆராய்ச்சிக்கான முதல் சோதனை நிலையத்தை ( மெக்கானிசம் லேப்) துவங்கியதோடு மட்டுமின்றி, ரகசிய குறியீடுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பிளாக் செயின் பற்றி ஓமன், மெக்சிகோ, இந்தியா, ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் பயிற்சி அளித்துள்ளார்.
தியேல் அறக்கட்டளையின் விருதினை பெறுவதன் மூலம், அபர்ணாவும் உலகின் தலைசிறந்த ரகசிய குறியீடு நிபுணர்கள் வரிசையில் இடம்பெறுகிறார்.
முன்னதாக பெல்லோஷிப் விருது பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் டாலர் உதவித் தொகையும், தியேல் அறக்கட்டளையைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோரின் வழிகாட்டுதலும் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.