பிக்பாஸ் நிகழ்ச்சியில் நண்பர்களாக சுற்றி வந்தவர்கள் யாஷிகா, ஐஸ்வர்யா, மஹத், ஷாரிக். இப்போது இவர்களுக்குள் கடந்த சில நாட்களாகவே பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.
பொன்னம்பலம் ஜெயில் சென்றதற்கு யாஷிகா, ஐஸ்வர்யா ஒரு காரணம் என்ற பேச்சும் இருக்கிறது.
இந்த நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ வந்துள்ளது. அதில் மஹத், யாஷிகாவிடம் அங்கு என்ன செய்ய சொல்கிறாய், வேறு எதுவும் செய்ய முடியாது என்று கூற, அதற்கு யாஷிகா இந்த பிரச்சனைகளால் கடைசியில் நான் தான் இந்த வீட்டை விட்டு வெளியேற போகிறேன் என்று மஹத்திடம் கோபமாக பேசுகிறார்.
அதோடு யாஷிகா ஜெயிலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார் என்றும் தெரிகிறது.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/kUGmPJMx12
— Vijay Television (@vijaytelevision) July 10, 2018