மதுரை ஒத்தக்கடையில் இளைஞர் ஒருவரை ரத்த தானம் செய்ய அழைத்துச் சென்று அவரது கிட்னியை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஷகிலா என்பவரின் மகன் முகமது பக்ருதின்(19). ஷகிலாவின் உறவினரான ராஜா முகமது என்பவர் தன் மகனுக்கு ரத்தம் தேவைப்படுவதாக கூறி பக்ருதினை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
பின்னர் ராஜா முகமது பக்ருதினின் தாயிடம், பக்ருதினுக்கு ரத்தத்தில் கோளாறு இருப்பதாகவும் அவனுக்கு ரத்தம் மாற்ற வேண்டும் எனக் கூறி, ஷகிலாவிடம் ஏமாற்றி கையெழுத்து வாங்கிவிட்டு, ராஜா மருத்துவர்களின் உதவியோடு பக்ருதினின் கிட்னியை திருடியுள்ளார்.
பின்னர் இதனையறிந்த ஷகிலா அதிர்ச்சியடைந்து இதுகுறித்து ராஜா முகமதிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் ஷகிலாவை மிரட்டியுள்ளார். இதனால் ஷகிலா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரை மருத்துவமனை நிர்வாகம் முழுவதுமாக மறுத்துள்ளது.