ஜப்பானில் பெய்து வரும் தொடர் அடை மழையினால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஜப்பானில் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களில் இதுவுமொன்று என அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஜப்பானின் மேற்கு மாநிலங்களான ஹிரோஷிமா, கியாட்டா, ஒக்காயாமா மற்றும் எஹிமே உள்ளிட்ட மாநிலங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது.
இதனால் குறித்த மாநிலங்களில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
இந்த அனர்த்தத்தினால் இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல வீதிகள் நீழில் முழ்கியுள்ளதுடன், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.