கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வலம்புரி சங்கினை கொண்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற் கொண்டு சென்ற வேளையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, கனகபுரம் பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சங்கினை பிறிதொரு நபருக்கு விற்பனை செய்யும் நோக்கில் யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல அதிஷ்டங்களை தரும் என நம்பப்படும் வலம்புரி சங்கு பல கோடி ரூபா பெறுமதியானவை என்பது குறிப்பிடத்தக்கது.