விடுதலைப்புலிகளின் செயற்பட்டாளர்கள் சுவிஸர்லாந்தில் மீண்டும் நிதி திரட்ட ஆரம்பித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
லுசன் – பேர்ன், சூரிச், ஷொப்னசன் பாசல், ஆராவ் ஆகிய பிராந்தியங்களில் உள்ள புலிகளின் உறுப்பினர்கள் இதற்கு பங்களிப்பு வழங்கி வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்க வேண்டும் என கூறியதை அடுத்த இந்த நிதித் திரட்டல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என வழங்கிய தீர்ப்பை அடுத்தே அங்கு மீண்டும் அந்த அமைப்புக்கான நிதி சேகரிப்பை ஆரம்பிக்க வழிகிடைத்துள்ளதாகவும் புலிகள் அமைப்புக்கு நிதி சேகரிப்பதாக அந்த அமைப்பின் சுவிஸ் தலைவர் கூறியுள்ளதாகவும் அந்த சிங்கள நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.