வவுனியா ஈரட்டை பெரியகுளம் அலகல்ல பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா ஈரட்டை பெரியகுளம் அலகல்ல பகுதியிலுள்ள தனியார் காணியினை இன்றைய தினம் காலை காணியின் உரிமையாளர் நிலத்தை பண்படுத்தும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு இருப்பதனை அவதானித்தார் அதனையடுத்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் அப்பகுதியில் பொது மக்கள் யாரையும் உட் செல்ல அனுமதிக்காது தடை போட்டதுடன் வெடிபொருட்கள் இருப்பதாக தேடுதல் மேற்கொண்டனர் இத் தேடுதலின் போது ஒரு வெடிகுண்டு மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே இதனை அண்டிய பகுதிகளில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை ஈரட்டை பெரியகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.