தமிழ் சினிமாவில் அஜித் விஜய் ரசிகர்கள் எப்போதும் எலியும் பூனையுமாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு அடுத்ததாக எந்நேரமும் சண்டையும் சச்சரவுமாக இருப்பவர்கள் தனுஷ் மற்றும் சிம்பு ரசிகர்கள். இவர்கள் இருவருக்குள் போட்டி இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
ஏன் சமீபத்தில் கூட தனுஷ் பேட்டி ஒன்றில் எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார் தனுஷ் மட்டும் தான் என கூறியிருந்தார். ஒரு சிலர்க்கு சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனவும் சிம்புவை மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார்.
அதற்கு சிம்புவும் எனக்கு சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை எனவும் பதிலுக்கு விடீயோவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் சிம்பு அளித்துள்ள பேட்டி ஒன்றில் எனக்கும் தனுஷுக்கு போட்டி இருந்தது உண்மை தான்.
ஆனால் அது சினிமா ரீதியான போட்டி மட்டும் தானே தவிர தனிப்பட்ட முறையில் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் முதலில் நாங்கள் வெளியில் பார்த்தல் அவ்வளவாக பேசி கொள்ள மாட்டோம் அதனால் தான் இப்படியான பேச்சு கிளம்பியது.
தற்போதெல்லாம் வெளியில், நிகழ்ச்சிகளில் பார்த்தால் பேசி கொள்கிறோம் அதனால் தற்போது அப்படியான பிரச்சனைகளும் இல்லை எனவும் கூறி உள்ளார்.