கடந்த 4 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வேலை செய்வதாக கணக்கு காட்டிக் கொண்டு பொது மக்களின் வரிப்பணத்தில் பல இலட்சம் ரூபாய்களை சம்பளமாகவும் இதை விட மாதம் 120 மணி நேரம் மணிக்கு 1000 ரூபாய் வீதம் ஒரு இலட்சத்துக்கு மேலாக மேலதிக வேலைநேர கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொண்டு கொழும்பிலும் கண்டியிலும் அரசாங்க வேலை நேரத்தில் சட்டவிரோதமாக தனியார் வைத்தியசாலைகளில் வருமானம் ஈட்டும் பல வைத்திய நிபுணர்கள் பற்றிய விபரங்கள் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
இதில் முதன்மையான மோசடியாளராக எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் விளங்குகிறார்.
இவர் சட்டவிரோதமாக லீவும் போடாமல் கிழமையில் 5 நாட்கள் கண்டியில் பல தனியார் வைத்தியசாலைகளில் அரசாங்க மருத்துவர் பிற மாவட்டங்களில் நோயாளிகளை பார்க்க முடியாது என்ற விதியையும் மீறி நோயாளிகளிடம் இருந்து வருமானம் ஈட்டி வருகிறார்.
புதன் கிழமைகளில் இவர் நிரந்தரமாக கண்டியில் சுவசேவன வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வை இட்டு வருகிறார்பேராசையுடன் இவர் இவ்வாறு செய்வதும் அல்லாமல் மட்டக்களப்பில் வந்து தங்கி நிற்கும் ஓன்று இரண்டு நாட்களிலும் அரசாங்க வேலை நேரத்திலும் தனியார் வைத்தியசாலைகளில் போதனா வைத்தியசாலை அத்தியட்சகர்,பிராந்திய சுகாதார பணிப்பாளர், மாகாண சுகாதார பணிப்பாளர் எந்த வித நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்ற துணிவில் அரசாங்க வேலை நேரத்திலும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளை பார்த்து வருகிறார் .
இவர் சட்டவிரோதமாக காத்தான்குடியில் தனியார் வைத்தியசாலையில் வியாழன் 8.30 காலை நோயாளிகளை பார்ப்பதாகவும் மேலும் திட்டமிட்ட முறையில் சத்திர சிகிச்சைக்காக பல நோயாளிகளை காலையில் இருந்து வாய் வழியாக எதுவும் எடுக்க வேண்டாம் என்று பட்டினி போட்டு விட்டு அவர்களில் 3-4 நோயாளிகளுக்கு மாத்திரம் சிகிச்சை செய்துவிட்டு ஏனைய பட்டினி கிடக்கும் நோயாளிகளுக்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு வந்தால் அன்று இரவே சிகிச்சை அளிப்பதாக அழுத்தம் கொடுத்து அங்கே வரச் செய்வார்.
இவரும் மற்றைய எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரும் லீவு எதுவும் எடுக்காமல் பெரும்பாலான நாட்களில் கண்டியிலேயே தங்கி இருப்பதால் பல சந்தர்ப்பங்களில் எலும்பு முறிந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் உரிய சிகிச்சை இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இந்தக் கொடுமைகளை தட்டிக் கேட்க வேண்டிய தமிழ் வைத்திய நிபுணர்களில் பலரும் காலை 8-மாலை 4 வரை அரசாங்க வேலை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் நோயாளிகளை பார்க்க முடியாது என்ற விதியை தாங்களும் பேராசையுடன் மீறி வருவதனால் வாய் திறக்க முடியாமல் இருக்கிறார்கள்