சுவையான தக்காளி சோறு செய்வதற்கான முறையை அறிந்து கொள்வோம். இலகுவான தக்காளி சோற்றினை சில நிமிடங்களில் செய்து முடிக்கலாம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மத்தி அரிசி – 500 கிராம்
ஆலிவ் எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
ஆலிவ் பழம் – 3 – 4
காளான் – 5
பெரிய தக்காளி – 2
தக்களா பேஸ்ட் – ஒன்றரை கரண்டி
நீர்
அவசியம் என்றால் மரக்கறி
சுவையூட்டிகள், தேவையான அளவு உட்பட
கறி மிளகாய் – 2
செய் முறை
அரிசியை நன்கு சமைத்து கொள்ளவும். தக்காளியின் தோலை உரித்து கொள்ளவும். கறி மிளகாயின் விதைகளை நீக்கி கொள்ளவும். ஆலிவ் பழம் மற்றும் காளானை பெரிது பெரிதாக வெட்டி கொள்ளவும். கிடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, காளான், கறி மிளகாய்களை போட்டதன் பின்னர் தக்காளி போட்ஸ்ட் போடவும். பின்னர் சற்று நீர் சேர்த்து கொள்ளவும். அதன் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தற்போது சோற்றினை அதில் சேர்க்க வேண்டும். சுவையான தக்காளி சோறு தயார்.