Loading...
குளியாப்பிட்டிய மத்திய வித்தியாலத்தை சேர்ந்த பாரமி வசந்தி எனும் மாணவி பின்லாந்து நாட்டில் புதிய கனிஷ்ட இலங்கை மெய்வல்லுனர் சாதனை ஒன்றை நேற்றைய தினம் நிலைநாட்டியுள்ளார்.
ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற வீராங்கனையே இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
Loading...
பின்லாந்தில் ஆரம்பமான 17வது சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் 3000 மீட்டர் மகளிருக்கான தடைகள ஓட்டப்போட்டியில் இந்த சாதனையை இவர் நிலைநாட்டியுள்ளார்.
இந்த முதற்சுற்று போட்டியில் இவர் 5வது இடத்திற்கு தெரிவானார். 10 நிமிடங்கள் 20.12 வினாடிகளில் இந்த தூரத்தை ஓடி முடித்தார். பின்லாந்தில் நடைபெறும் இந்த போட்டியில் 158 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 1500 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...