Loading...
நுவரெலியாவிலுள்ள உலக முடிவினை காண புதிய வீதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பலங்கொடையில் இருந்து நம்பெரியல் தோட்டம் ஊடாக உலக முடிவிடத்திற்கு செல்லும் சிறிய வீதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களால் இலங்கையின் பெருந்தோட்டப் பகுதி ஆட்சி செய்த காலப்பகுதியில் இந்த வீதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
Loading...
பலங்கொடையில் இருந்து நம்பெரியல் தோட்டம் ஊடாக உலக முடிவிடம் வரை செல்லும் இந்த வீதி இன்றும் பயன்படுத்த கூடிய வகையில் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த வீதி ஊடாக உலக முடிவிடத்தை பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் இரண்டரை கிலோ மீற்றர் தூரம் மாத்திரமே நடந்து செல்ல வேண்டும்.
இந்த வீதியை அபிவிருத்தி செய்து சுற்றுலாதுறையை மேம்படுத்துமாறு அந்தப் பகுதி மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் உலக முடிவிடத்தை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகள் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
Loading...