நடிகர் சிவா நடிப்பில் தமிழ் படம் 2.0 நேற்று உத்தியோபூர்வமாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.
பெரிய ஹீரோக்களுக்கு நிகராக இந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று வெளியாகிய இந்த படத்தின் முதல் நாள் வசூல் விபரம் வெளியாகி அதிரவைத்துள்ளது.
தமிழகத்தில் மாத்திரம் இந்த படத்திற்கு ஆறு கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழகத்தில் இந்த வருடத்தில் முதல் நாளில் அதி கூடிய வருமானங்களை பெற்று தந்த படங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது.
ரஜின் காலா படம் தான் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த இடத்தில் உள்ள சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு சமமான வசூளை தமிழ் படம் 2.0 பெற்றுள்ளதென தகவல் ஒன்று கூறப்பட்டு வருகின்றது.