கமல்ஹாசன் இயக்கத்தில் அவர் நடித்த ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த படத்துடன் வேறு படமும் குறித்த நாளில் ரிலிஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படவில்லை. அதற்கான அறிவிப்புகளும் வெளியாகியிருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் நயன்தாரா, கமல்ஹாசனுடன் மோதவுள்ளார் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அவரது நடிப்பில் வெளியாகும் கோலமாவு கோகிலா படம், அடுத்த மாதம் 10ஆம் திகதி ரிலிஸ் ஆகவுள்ளது. நேற்று மாலை இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இந்த படங்கள் இரண்டிற்கும் ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு உள்ளது. எனினும் இந்த படத்தினால் வசுல் இரண்டாக பிரியும் என கூறப்படுகின்றது.
தமிழ் சினிமா வரலாற்றில் கதாநாயகிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட படம் கமல்ஹாசனுடன் மோதும் முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.