இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 1.09 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவை நேரலையாக 2,750 பேர் பார்வையிட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில் குடியிருக்கும் 24 வயது முன்னா குமார் தொடர்ந்து ராணுவத்தில் சேர்வதற்காக முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
ஆனால் 5 முறை முயற்சித்தும் தம்மால் தெரிவாக முடியவில்லை என்ற விரக்தியால் அவர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இரவு உணவு அருந்திய பின்னர் தமது அறைக்கு சென்ற அவர் பேஸ்புக் நேரலையில் தனது தற்கொலைக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
பின்னர் தூக்குமாட்டிக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
மட்டுமின்றி 6 பக்கம் கொண்ட கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்துள்ளார்.
ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தமது பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்ற காரணமே தமது இந்த முடிவுக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.