முள்ளங்கி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குக் குளிர்ச்சியை அளிக்கும். இன்று முள்ளங்கி சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முள்ளங்கி – ஒன்று
இஞ்சி – சிறிய துண்டு
வெண்ணெய் – சிறிதளவு
மிளகுத்தூள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
முளைகட்டிய பச்சைப்பயறு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை :
முள்ளங்கியை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
இஞ்சியை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
குக்கரில் முள்ளங்கியுடன் இஞ்சி, சீரகம், பூண்டு, பச்சைப்பயறு. உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும்.
ஆறியதும் குக்கர் மூடியை திறந்து மத்தால் மசிக்கவும்.
சூடாக சூப் பவுலில் ஊற்றி வெண்ணெய் சேர்த்துக் கலந்து, மிளகுத்தூள் தூவிப் பருகலாம்.
சூப்பரான முள்ளங்கி சூப் ரெடி.