15.07.2018 ஞாயிற்றுக்கிழமை இன்றைய ராசிபலன்கள் விளம்பி வருடம், ஆனி மாதம் 31ம் திகதி, துல்ஹாதா 1ம் திகதி,15.7.18 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி இரவு 2:07 வரை; அதன் பின் சதுர்த்தி திதி, ஆயில்யம் நட்சத்திரம் மதியம் 3:44 வரை; அதன்பின் மகம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு
மேஷம்:
தாமதமான செயலில் அனுகூலம் தேடி வரும். நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும்.
தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு அளவில் வளர்ச்சி பெறும். லாபம் உயரும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.
ரிஷபம்:
மனதிற்கு சங்கடமான சூழ்நிலை உருவாகலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் பொறுப்பு அதிகரிக்கும். பணவரவு சுமார்.
பணியாளர்கள் பணிச்சுமையை சந்திப்பர். பிராணி களிடம் விலகுவது நல்லது. அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.
மிதுனம்:
உடல்நலத்தில் கவனம் அவசியம். திட்டமிட்ட செயல் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரம் சீர்பெற நண்பரின் உதவி கிடைக்கும்.
வருமானம் சீராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பெண்களுக்கு தாய்வீட்டாரின் உதவி உண்டு.
கடகம்:
உங்களின் கருத்துக்கு குடும்பத்தினர் மதிப்பளிப்பர். தொழில், வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும்.
பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். வாகனப் பயணம் இனிதாக அமையும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.
சிம்மம்:
உங்களை சிலர் குறை சொல்ல காத்திருப்பர். செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவது அவசியம்.தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேறும்.
பணவரவு சுமாராக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாட்டால் மனதில் புத்துணர்வு பிறக்கும்.
கன்னி:
நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளின் நற்செயலால் பெருமிதம் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும்.
சேமிக்கும் விதத்தில் ஆதா யம் கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்..
துலாம்:
எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இயங்கும்.
பிறர் பார்வையில் அதிக பணம் செலவு செய்ய வேண்டாம். பணியாளர்கள் நிர்வாகத்தின் குறிப்பறிந்து நடப்பது நல்லது. தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.
விருச்சிகம்:
இஷ்ட தெய்வ அனுகிரகத்தால் நன்மை உண்டாகும். அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர்.
தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
தனுசு:
நல்லவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். குடும்பத்தினர் அதிக அன்பு பாராட்டு வார். தொழில் வியாபாரத்தில் இருக்கிற குறுக்கீடு விலகும்.
வருமானம் உயரும். பணியாளர் களுக்கு சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
மகரம்:
உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ப்பணி நிறைவேற தாமதமாகும். மிதமான பணவரவு கிடைக்கும்.
திடீர் செலவால் சேமிப்பு பணம் கரையும். பெண்கள் எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதி தர வேண்டாம்.
கும்பம்:
பேச்சு, செயலில் நிதானம் பின்பற்றவும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர்.
பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை. ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் உண்டாகும்.
மீனம்:
மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் கடந்த கால உழைப்பின் பயன் கிடைக்கப்பெறுவீர்கள்.
லாபம் உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் குடும்பத்தினருடன் விருந்து விழாவில் பங்கேற்பர்.