ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 162 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசை எதிர்த்து போட்டி அரசு நடத்தும் தலிபான் இயக்கம், நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்நிலையில், நாட்டின் 12 இடங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி மற்றும் தரைப்படை தாக்குதல்களில் ஒரே நாளில் 7 தலிபான் தளபதிகள் உட்பட 162 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 66 பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளதாகவும், அதில் ஒரு பயங்கரவாதியை கைது செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.