கிளிநொச்சியில் அடித்து கொலை செய்யப்பட்ட சிறுத்தை புலி, வளர்க்கப்பட்டது என்பதற்கான அடையாளம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆங்கில வாரப்பத்திரிகையொன்றில் இந்த சம்பவம் தொடர்பில் கட்டுரையொன்று வெளியாகியுள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் கொலை செய்யப்பட்ட சிறுத்தை புலியானது கூடொன்றில் வளர்க்கப்பட்டதற்கான அடையாளம் தென்படுகிறது.
சிறுத்தையின் உடற்கூற்று பரிசோதனையில் இதற்கான அடையாளம் காணப்படுவதுடன், இரு தினங்கள் அது உணவு எதனையும் உட்கொள்ளவில்லை என்பதற்கான தடயங்களும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாள்குளம் பிரதேசத்தில் கடந்த 21ஆம் திகதி சிறுத்தை புலி ஒன்று அடித்து கொலை செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான காணொளி வைரலாகியிருந்ததுடன், இதனடிப்படையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.