சிறுவர் பாலியல் துர்நடத்தைகள் புரிபவர்களுக்கும் தூக்குத் தண்டனையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க அரசு நடவடிக்கை எடுததுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
போருக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.
ஒன்றரை இலட்சம் இராணுவம் வடக்கில் தங்கியிருக்கின்ற போதும் போதைப்பொருளுடன் தொடர்புடைய செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
அரசு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது. அதேபோன்று சிறுவர் பாலியல் துர்நடத்தைகளைக் கடுமையான சட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.
வித்தியா, ரெஜினா போன்ற சிறுமிகளின் கொலை வடக்கை மட்டுமல்ல உலகத்தையே உலுக்கியவை. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது தடுப்பதற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். என்றார்.