போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
கைதுசெய்யப்படுவோர் காவல் நிலையத்தினுள் வைத்து மோசமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அது ஒரு மனித உரிமை மீறல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் விற்பனை செய்வதாக பொய்க் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள சிலர் சிறைச்சாலைகளில் வைத்து கப்பம் பெறும் நோக்குடன் சித்திவதைகளுக்கு உள்ளாகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் விசாரணையின்றி வெளியில் அழைத்துச்செல்லப்பட்டு கொல்லப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன எனவும் இது மிகவும் மோசமான மற்றும் மனித உரிமையை மீறும் செயல் எனவும் தெரிவித்த அவர் இத்தகைய சம்பவங்கள் கோத்தபாயவின் காலத்தில் இடம்பெற்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.