அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அணி மூன்றாக பிளவுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த 16 பேர் அணியின் பெரும்பான்மையானோர் கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்னும்நிலைப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூட்டு எதிர்க்கட்சியில் இணையாது சுயாதீனமான எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளதுடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால ஆகியோர் வேறு ஒரு நிலைப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த பிளவு காரணமாக, அந்த அணியினர் ஆரம்பித்த சுதந்திரத்தின் மனசாட்சி கூட்டத் தொடர் இடையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.