சமீபத்தில் நெட்பிலிக்ஸில் வெளியாகியுள்ள சேக்ரட் கேம்ஸ் சீரிஸ் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தும் விதத்தில் இது இருப்பதாக இந்த சீரியல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே இதில் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்துளளார். இந்த காட்சிகள் இணையம் மட்டுமின்றி தற்போது பார்ன் இணையதளங்களிலும் பரவி வருகிறது.
இது பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள ராஜ்ஸ்ரீ “என்னை பார்ன் நடிகை என்று கூட மெசேஜ் அனுப்புகிறார்கள். ரொம்ப cheapஆக கமெண்ட் செய்கிறார்கள். நான் அனுராக் கஷ்யப்பை முழுமையாக நம்பினேன். மேலாடையை கழற்றுவது எனக்கு மிகப்பெரிய விஷயம், நான் கேமரா முன்பு அதை செய்தேன். நான் வெட்கப்படவில்லை.. மற்றொரு படத்தில் முழு நிர்வாணமாகவே நடித்துள்ளேன். அது பற்றி இப்போ கூறமுடியாது” என கூறியுள்ளார்.
மேலும் அவரது கணவர் தான் அனைத்து சமயங்களிலும் உறுதுணையாக இருந்தாராம். “தேவைப்பட்டால் நீ நிர்வாணமாக கூட நடி.. என்னுடைய அனுமதி தேவையில்லை” என அவர் கூறினாராம்.