யோகாவில் சாதனை செய்து வரும் 8 வயது இந்திய வம்சாவளி சிறுவன், சிறந்த பிரிட்டன் வாழ் இந்தியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் நடந்த உலக மாணவர் விளையாட்டுப் போட்டியில், பிரிட்டன் சார்பில் பங்கேற்ற இந்திய வம்சாவளி சிறுவன் ஈஸ்வர் சர்மா(8), தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். துருக்கியில் நடந்த யோகா சாம்பியன் போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்தார். பிரிட்டனில் நடந்த யோகா போட்டியிலும் சாம்பியன் ஆனார்.
இந்நிலையில் இவரை கவுரவப்படுத்தும் விதமாக, இளம் சாதனையாளர்களுக்கான விருதில் சிறந்த பிரிட்டன் வாழ் இந்தியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். யோகாவை தனக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு இவர் நன்றி தெரிவித்தார்.
பிரிட்டனில் 100க்கும் மேற்பட்ட யோகா போட்டியில் பங்கேற்றுள்ள இவரது பூர்வீகம் கர்நாடக மாநிலம் மைசூரு என்பது குறிப்பிடத்தக்கது.