சம்பளம் இன்றி அலுகோசு (மரண தண்டனை நிறைவேற்றுனர்) பதவியை ஏற்றுக் கொள்ள தயார் என 71 வயதான மூதாட்டியொருவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனை நிறைவேற்றும் பணியை பொறுப்பேற்று கொள்ள தயார் என சிலாபம் ஆராச்சிகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த எல்.பி.கருணாவதி என்ற 71 வயதான மூதாட்டியே தெரிவித்துள்ளார்.
பல கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டின் எதிர்காலத்தை சிதைக்கும் இவ்வாறான குற்றவாளிகளை தராதரம் பாராது அழிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிறுவர் பாலியல் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தர்ம தீவாக இருந்த நாடு தற்போது மரண தீவாக உருமாற இடமளிக்கப்படக் கூடாது என அவர் மேலும் கூறியுள்ளார்.