மதுபான விடுதியில் பணியாற்றும் இரு பெண்களுக்கு, 2,000க்கும் மேற்பட்ட, ஆபாச குறுந்தகவல்களை சமூக வலைதளத்தில் அனுப்பிய, பிரிட்டன் அமைச்சர், ஆண்ட்ரூ கிரிபித்ஸ், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டனில், தெரசா மே, பிரதமராக உள்ளார். அவரது அமைச்சரவையில், சிறுதொழில் துறை அமைச்சராக, ஆண்ட்ரூ கிரிபித்ஸ், 47, பணியாற்றினார்.இவர், மதுபான விடுதியில் பணியாற்றும் இரு பெண்களுக்கு, கடந்த மூன்று வாரங்களில், 2,000க்கும் மேற்பட்ட ஆபாச குறுந்தகவல்களை, சமூக வலைதளம் மூலம் அனுப்பி உள்ளார். இது குறித்து, ‘சண்டே மிரர்’ பத்திரிகை விரிவான விபரங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது.இதையடுத்து, தன் பதவியை ராஜினாமா செய்வதாக, ஆண்ட்ரூ நேற்று அறிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
என் நடத்தையால், மிகவும் அவமானம் அடைந்துள்ளேன்; இது, என் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமருக்கும், தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அமைச்சர் பதவியை ராஜினாமாசெய்துள்ளேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.