கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர் அனந்த் வைத்தியநாதன். இரண்டாவது வார எலிமினேஷனில் இவர் வெளியேற்றப்பட்டார். வெளியேறும் போது பொன்னம்பலத்தை சிறையிலும் அடைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு நேற்று நடந்த சூப்பர் சிங்கர் சீசன் 6-ல் கலந்து கொண்டார். அப்போது இவரிடம் இங்கே இருக்கும் நடுவர்களின் யாரை ஜெயிலில் அடைப்பீர்கள் என கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அனந்த் வைத்தியநாதன் அனுராதா ஸ்ரீ ராமை தான் ஜெயிலில் போடுவேன் காரணம் அவர் ஒல்லியாக இருக்கிறார். கம்மி வழியாக ஈசியாக வெளியேறி விடுவார் என கூறிய இவர் பொன்னம்பலம் பெண்களை தவறாக பேசினார்.
அதனால் தான் அவரை ஜெயிலில் அடைத்தேன். மா.க.ப பிரியங்காவை கிண்டல் அடித்தால் அவரையும் ஜெயிலில் போடுவேன் என கூறியுள்ளார்.