உலகில் மிகவும் தேடப்படும் பிரித்தானிய பெண் பயங்கரவாதி ஸ்பெயின் நாட்டில் தற்கொலை தாக்குதல் நடத்த ஆயத்தமாவதாக உளவுத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு லண்டன் தற்கொலைத் தாக்குதலை முன்னெடுத்த பயங்கரவாதிகளில் ஒருவரான Samantha Lewthwaite தற்போது உலக அளவில் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராவார்.
குறித்த தற்கொலை தாக்குதலில் இவரது கணவர் கொல்லப்பட்டதை அடுத்து பிரித்தானிய அதிகாரிகளால் இவர் The White Widow என அழைக்கப்பட்டு வருகிறார்.
4 பிள்ளைகளுக்கு தாயாரான இவர் தற்போது சர்வதேச அளவில் புகழ்பெற்ற கடற்கரை சுற்றுலாதளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த ஆயத்தமாவதாக பிரித்தானிய உளவு அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.
மட்டுமின்றி 30கும் மேற்பட்ட பயங்கரவாத பெண்களை குறித்த தாக்குதலுக்காக இவர் தயார் படுத்தி வைத்துள்ளதாகவும் உறுதியான தகவல் பிரித்தானிய அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.
இவரது பட்டியலில் பிரித்தானியா, கிரேக்கம், துருக்கி, ஸ்பெயின் மற்றும் கானரி தீவுகள் என பல முக்கிய பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துனிஷியாவில் உள்ள El Kantaoui கடற்கரை சுற்றுலாதலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.எஸ் பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிச்சூடு வெறியாட்டத்தில் 38 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
மேலும் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னணியில் Samantha Lewthwaite-ன் பங்கு மிக அதிகம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.