பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானுக்கு முறைகேடான வழியில் 5 குழந்தைகள் உள்ளதாக அவரது முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார். #ImranKhan #RehamKhan
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பாகிஸ்தான் தெக்ரிக்- இ-இன்சாப் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள அவர் இதுவரை 3 திருமணங்கள் செய்துள்ளார்.
அவர்களில் ஜெமீமா, ரேஹம்கான் ஆகிய 2 பெண்களை விவாகரத்து செய்து விட்டார். சமீபத்தில் புஷ்ரா மனிகா என்பவரை திருமணம் செய்துள்ளார். வருகிற 25-ந்தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் கட்சி போட்டியிடுகிறது. அதில் வெற்றி பெற்று அவர் பிரதமராகும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இம்ரான்கானுடன் 10 மாதமே வாழ்ந்த அவரது 2-வது மனைவி ரேஹம்கான் சுயசரிதை புத்தகம் வெளியிட்டுள்ளார். அதில் இம்ரான்கான் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கிய போது நான் பல ஆலோசனைகளை வழங்கி உதவினேன். இதனால் பல தனிப்பட்ட வழக்குகளை சந்திக்க நேரிட்டது.
அவருக்கு முறைகேடான வழியில் பிறந்த 5 குழந்தைகள் உள்ளன. இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அவரோடு முறைகேடான உறவு வைத்திருந்த சிலர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் வெளியிடப்படுள்ள இப்புத்தகம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தகத்துக்கு பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.