சென்னை அயனாவரத்தில் 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமியை 15 பேர் பாலியல் சித்ரவதை செய்ததாக அந்தச் சிறுமியின் தாயார் அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் அயனாவாரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கேட்கும் திறன் இல்லாத தனது மகளை குடியிருப்பின் காவலாளி ரவி என்ற நபர் உள்ளிட்ட ஊழியர்கள், குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட 15 பேர் பாலியல் சித்திரவதை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
கேட்கும் திறன் இல்லாத தனது மகளால் சரியாக பேச முடியாததால் தனக்கு நேர்ந்ததை விளக்கத் தெரியவில்லை என்றும், அந்தச் சிறுமி உடல் நலமின்றி இருந்தது குறித்து தான் சோதித்துப் பார்த்த போது சிறுமிக்கு நேர்ந்த அவலம் தனக்கு தெரியவந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். மேலும் காவலாளி உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.