கொழும்பில் சுட்டு கொலை செய்யப்பட்ட மாநகரசபை உறுப்பினர் எஸ்.கே.கிருஷ்ணாவை சுட்ட துப்பாக்கிதாரி ஒரு ஒப்பந்த கொலையாளி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ் குழு உருவாக்கப்பட்டுள்ளதுடன், மூன்று பிரதான கோணங்களில் விசாரணைகள் நடைபெறுகின்றன.
இந்த கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி குறித்த கொலையாளி ஆயுதங்களை இயக்குவதில் தேர்ச்சி பெற்றவர் எனவும், இவர் ஒரு ஒப்பந்த கொலையாளி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிதாரியின் அடையாளம் மற்றும் பெயர் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி இன்னும் ஒரு வாரத்திற்குள் அவரை கைது செய்ய முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த கொலை தொடர்பில் இதுவரை 15 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கொலைக்கான காரணத்தை கண்டறிய மூன்று பிரதான கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி காலை கிருஷ்ணா அவரது கடையில் வைத்து சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.