பிரெஞ்சு அணியின் உலக கோப்பை வெற்றிக்கொண்டாட்டத்தில் மோனலிசா ஓவியமும் இணைந்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரெஞ்சு அணி சாம்பியன் என அறிவிக்கப்பட்டதும், லூவர் அருங்காட்சியகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் மோனலிசா ஓவியத்தின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்கள்.
ஆச்சரியமூட்டும் வகையில், மோனலிசா பிரெஞ்சு உதைப்பந்தாட்ட அணியின் உடை போன்று நீல நிறத்திலான உடை அணிந்திருப்பது போல் கணனி வரைகலைஞர்களால் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதன் மேலே பிரெஞ்சு அணிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக எழுதப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம், சட்டென சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்ததுடன், தற்போது முப்பதாயிரம் லைக் இப்புகைப்பதிற்காக குவித்துள்ளது. அத்துடன் பலர் இந்த புகைப்படத்தினை தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த புகைப்படத்திற்கான லைக் மற்றும் பகிரும் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இதுதவிர, நேற்று காலையில் இருந்து, மைதானத்தில் ஜனாதிபதி மக்ரோன் துள்ளி குதிக்கும் புகைப்படமும், இந்த மோனலிசா ஓவியமும் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.