Loading...
மீன்பிடி வள்ளங்களுக்கு புதிய காப்புறுதி முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி தெரிவித்தார்.
கடற்தொழிலாளர் சங்க பிரநிதிகளுடன் நேற்று அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை தொடர்பாக கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனை குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.
Loading...
எரிபொருள் விலை சூத்திரத்தினை நடைமுறைப்படுத்தும் போது கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொள்வதனை கண்டறிவதற்காக நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை அமைப்பதற்கு இதன் போது கலந்துரையாடப்பட்டது.
கடற்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள 4500 கடற்தொழிலாளர்களுக்கு புதிய காப்புறுதி முறை அறிமுகப்படுத்துவது குறித்தும் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
Loading...