முறைப்பாடொன்றை விசாரிப்பதற்காக காவல்நிலையத்திற்குவந்த 6 பேர் காவல்நிலையத்தினுள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று குருணாகல் காவல்நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
முகப்புத்தகத்தில் ஆபாசமான புகைப்படங்களை பதிவேற்றுதல் மற்றும் ஆபாச வார்த்தைகளை பதிவேற்றுதல் குறித்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றுக்கு அமைய, அதன் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போதே, குறித்த ஆறுபேருக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதலைக் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினர் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியதை அடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பின்னர் ஆறு பேரும் ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோதலில் ஈடுபட்டவர்கள் 20 மற்றும் 21 வயதையுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.