அவுஸ்திரேலியாவிற்கு 2012 ம் ஆண்டு படகுமூலம் சென்ற திலீபன் என்ற இலங்கை தமிழரை திங்கட்கிழமை நள்ளிரவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.
திலீபன் தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளதால் அவர் தனது குடும்பத்தை நிரந்தரமாக பிரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திலீபனும் – கார்த்திகாவும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. திலீபனின் மனைவி கார்த்திகாவுக்கு அகதி SHEV விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திலீபனை அவரது மனைவி மற்றும் 11 மாத பெண் குழந்தையிடம் இருந்து பிரிப்பது குழந்தையின் நலன்களுக்கான அடிப்படை கோட்பாடுகளை மீறு செயல் என UNHCR-ஐ.நா சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
திலீபனை நாடு கடத்தும் உத்தரவு வந்தவுடன், இதனை தடுத்துநிறுத்துமாறு அவுஸ்திரேலிய அரசிடம் ஐநா அமைப்பு கோரிக்கை விடுத்தும் அது பலன் அளிக்கவில்லை என அவர்கள் தரப்பில் தெவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, கார்த்திகாவுக்கு வழங்கப்பட்டு விசா மூலம் அவர் தனது கணவரை இலங்கைக்கு சென்று பார்க்க இயலாது மட்டுமின்றி தனது கணவரை அவுஸ்திரேலியாவுக்கும் வரவழைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.